பில் பெர்கின்ஸ் (Bill Perkins) எழுதிய “Die with Zero” என்ற ஒரு புத்தகம் உள்ளது. அதன் கருத்து என்னவெனில், மனிதன் நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதே நேரத்தில் நன்றாக செலவழிக்கவும் வேண்டும். பணத்தை தனக்காகவும், அனுபவங்களைப் பெறவும் பயன்படுத்த வேண்டும். மரணத்திற்கு பின் அந்த நினைவுகளே மதிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவை அறியாதவர்கள் நரகத்தில் இருப்பார்கள் என்றால், அவர்கள் அந்த நினைவுகளை எவ்வாறு அனுபவிப்பார்கள்? மேலும், தன் பிள்ளைகளுக்கு எந்தச் சொத்தையும் விட்டுச் செல்லக் கூடாது என்பதும் இந்தக் கொள்கையில் கூறப்படுகிறது. வருத்தமாக, இது உலகியலான தத்துவத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது.
நல்ல மனிதன் (Good Person):
வேதாகமம் சொல்லுகிறது; “நல்லவன் தன் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சுதந்தரத்தை விட்டுச் செல்கிறான்”
(நீதிமொழிகள் 13:22). ஒரு தேவபக்தியான மனிதன் கடுமையாக உழைத்து, போதுமான அளவு சம்பாதிப்பதோடு, பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டுச் செல்லும்படி சேமிக்கவும் செய்கிறான். சுயநலமானவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது.
நல்ல உதாரணத்துவமான மனிதன் (Generous Person):
ஒரு நல்ல மனிதன், தாராள குணமுள்ள மனிதனுமாகவும் இருப்பான். அவன் எல்லாவற்றையும் தனக்காக மட்டும் செலவழிக்காமல், அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வழிகளைத் தேடுவான். தேவ ராஜ்யத்திற்காகவும் கொடுத்து, பரலோகத்தில் பொக்கிஷத்தையும் சேகரிப்பான். “பூமியில் அல்ல, பரலோகத்தில் உங்களுக்காக பொக்கிஷத்தைச் சேகரியுங்கள்”
(மத்தேயு 6:20). ஆம், “பெறுவதைவிட கொடுப்பதே அதிக ஆசீர்வாதம்”
(அப்போஸ்தலர் 20:35).
நல்ல முன்மாதிரிகள் (Good Examples):
தேவபக்தியான பெற்றோர்கள், நல்ல பெற்றோர்களும் நல்ல தாத்தா–பாட்டிகளுமாக இருப்பார்கள். அவர்களின் தேவபக்தி, தாராள குணம், கருணை, நீதியான வாழ்க்கை இவையெல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் உண்மையான சுதந்தரம். அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் போலவே தேவபக்தியில் நடக்கக் கற்றுக்கொள்வார்கள்.
நல்ல ஆலோசனை (Good Counsel):
உண்மையைப் போதித்து, மிகப் பரிசுத்தமான விசுவாசத்தைப் பகிர்ந்து, நெறிமுறைகளை கற்றுத்தந்து, நீதியை பிள்ளைகளின் இதயங்களிலும் மனங்களிலும் பதியவைக்கும் பெற்றோர்களே சிறந்த பெற்றோர்கள். “என் மகனே, உன் தகப்பன் போதனையைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே; அவைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமும், உன் கழுத்துக்கு ஆரமுமாயிருக்கும்” (நீதிமொழிகள் 1:8–9). இந்த ஆலோசனைகள் தலைமுறை தலைமுறையாக சொல்லப்படுகின்றன.
நல்ல ஜெபங்கள் (Good Prayers):
தேவபக்தியான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடைவிடாது ஜெபிக்கிறார்கள்.
பெற்றோரின் ஜெபங்களை தேவன் கேட்டு, பிள்ளைகளை ஆசீர்வதித்து, பாதுகாத்து, தேவைகளை நிறைவேற்றுகிறார். பிள்ளைகள் கர்த்தருடைய வழிகளில் நடக்கவும், நீதியான வாழ்க்கை நடத்தவும், வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கவும் பெற்றோர்கள் மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.
தேவனுடைய பார்வையில் நான் எப்படிப்பட்ட நபர்?
Rev. Dr. J.N. Manokaran