யார் இரட்சிக்கப்படுவான்?
மத்தேயு 10:22; மத்தேயு 24:13 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா ராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (இறுதிவரை மனஉறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்) 1. கர்த்தரை விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் 2. கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான் 3. கர்த்தரின் வழியாய் பிரவேசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் 4. ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் 5. உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் 6. ஞானமாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் 7. மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவான் Author: Rev. M. Arul Doss
அப்போஸ்தலர் 16:31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவிர்கள்...
ரோமர் 10:9 கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்
யோவேல் 2:32; அப்போஸ்தலர் 2:21; ரோமர் 10:13 கர்த்தருடைய நாமத் தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்
யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித் தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்
மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக் கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்
நீதிமொழிகள் 28:18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறு பாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்
நீதிமொழிகள் 28:26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிற வனோ இரட்சிக்கப்படுவான்
ஏசாயா 30:15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப் படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்
Author: Rev. M. ARUL DOSS