சிலுவையைப் பற்றி பவுல்
1. சிலுவைப்பற்றிய உபதேசம் 2. சிலுவையைக்குறித்து மேன்மை 3. சிலுவையில் சிந்தின இரத்தம் 4. சிலுவையில் கொன்ற பகை 5. சிலுவையில் கண்ட வெற்றி 6. சிலுவையில் அறைந்த பழைய மனுஷன் 7. சிலுவை மரணபரியந்தம் கீழ்ப்படிதல் Author: Rev. M. Arul Doss
1கொரிந்தியர் 1:17-18 சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
கலாத்தியர் 6:14 நானோ(பவுல்) நம்முடைய இயேசுகிறிஸ்துவின் சிலுவை யைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறை யுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்
கொலோசெயர் 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதா னத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
எபேசியர் 2:16(13-18) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவை யிலே வெற்றிசிறந்தார்.
ரோமர் 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறைப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
Author: Rev. M. ARUL DOSS