மறு உத்தரவு அளிக்கும் கர்த்தர்
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். 1. கூப்பிடுபவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர் 2. காத்திருப்பவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர் 3. பிரார்த்திருப்பவருக்கு மறுஉத்தரவு அளிக்கும் கர்த்தர் Author: Rev. M. Arul Doss
சங்கீதம் 91:15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிசெய்வேன்
சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்;
ஏசாயா 30:19 உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு மறுஉத்தரவு அருளுவார்
ஏசாயா 58:7-12நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்; இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
ஏசாயா 65:17-25 அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன் அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
யோனா 2:2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்
சங்கீதம் 38:15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
சங்கீதம் 5:3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்
மீகா 7:7 தேவனுக்குக் காத்திருப்பேன்; என்னைக் கேட்டருளுவார்.
யோபு 12:4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்
சங்கீதம் 143:1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங் களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின் படியும் உத்தரவு அருளும்
சங்கீதம் 66:19 மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்
1சாமுவேல் 1:17,27; 1இராஜாக்கள் 9:3; 2இராஜாக்கள் 20:5; எஸ்றா 8:23
Author: Rev. M. ARUL DOSS