இரட்டிப்பாய் தரும் இறைவன்
யோபு 42:10,12 யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். 1. இரட்டிப்பான வரம் 2. இரட்டிப்பான நன்மை 3. இரட்டிப்பான சுதந்தரம் 4. இரட்டிப்பான கனம் 5. இரட்டிப்பான பங்கு Author: Rev. M. Arul Doss
2இராஜாக்கள் 2:9 (1-14) எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னை விட்டு எடுத்துக்கொள்ளப்படும்முன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும்படி வேண்டுகிறேன்
சகரியா 9:12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்கு திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்
சங்கீதம் 85:12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்.
சங்கீதம் 84:11 உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்
ஏசாயா 61:7 உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலட்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப் படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.
1தீமோத்தேயு 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற வர்களை, இரட்டிப்பான கனத்திற்கு பாத்திரராக எண்ணவேண்டும்.
1சாமுவேல் 1:5 எல்க்கானா அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
Author: Rev. M. ARUL DOSS