உதவி செய்யும் கர்த்தர்
1சாமுவேல் 7:12(1-14) சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபேனேசர் என்று பேரிட்டான். 1. சோதனைகளில் நமக்கு உதவிசெய்கிறார் 2. பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார் 3. இக்கட்டுகளில் நமக்கு உதவிசெய்கிறார் Author: Rev. M. Arul Doss
எபிரெயர் 2:18 (12-18) அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
1கொரிந்தியர் 10:13 திராணிக்குமேலாக சோதிக்க இடங்கொடாமல்... தப்பிக்கொள்ள போக்கையும் உண்டாக்குவார்.
வெளிப். 3:10 சோதனைகாலத்திற்குத் தப்பும்படி...காப்பேன்.
யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்
2பேதுரு 2:9 தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க வும்... அறிந்திருக்கிறார்.
ரோமர் 8:26(26-30) அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்... ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்...
2நாளாகமம் 14:11 பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்.
2கொரிந்தியர் 12:9 பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
1கொரிந்தியர் 1:27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்
சங்கீதம் 37:39-40 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம் கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்.
சங்கீதம் 60:11 இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்
சங்கீதம் 107:6,13,19,28 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட் டார்கள்; அவர்கள் இக்கட்டுகளில் இருந்து விடுவித்தார்
Author: Rev. M. ARUL DOSS