சங்கீதம் 82

சங்கீதம் 82

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

8 தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

Related Topics/Devotions

தாமதமான நீதி; மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் - Rev. Dr. J.N. Manokaran:

1981, டிசம்பர் மாதம், அன்று Read more...

நீதியான செயலில் ஈடுபடு - Rev. Dr. J.N. Manokaran:

தொலைதூர கிராமத்தில் இருந்து Read more...

திக்கற்றவர்களாக விடமாட்டார் - Rev. M. ARUL DOSS:

Read more...

எளிமை தான் வலிமை - Rev. M. ARUL DOSS:

Read more...

எது நமக்குப் பாவமாயிருக்கும்? - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தருக்கு நேர்ந்ததைச் Read more...

Related Bible References