சங்கீதம் 130

சங்கீதம் 130

1 கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2 ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

3 கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.

6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

8 அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

Related Topics/Devotions

ஆழத்திலிருந்து ஆவிக்குரிய வாழ்வுக்கு - Rev. Dr. J.N. Manokaran:

பயங்கரமான செய்தியாக, பயன்பட Read more...

இரட்சிப்பு (இரண்டாம் வார்த்தை - Rev. M. ARUL DOSS:

Read more...

கர்த்தருடைய செவிகள் மந்தமாவதில்லை - Rev. M. ARUL DOSS:

Read more...

இரட்சிப்பு அளிக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தரே இரட்சிப்பு
Read more...

ஆலயம் ஒன்றே போதும் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References